UC News

நியூசிலாந்தில் உதவி செய்யும் வகையில் Artificial Intelligence  போலீஸ் நியமனம்!

நியூசிலாந்தில் உதவி செய்யும் வகையில் Artificial Intelligence  போலீஸ் நியமனம்!

நியூசிலாந்தில் அவசரமில்லா தேவைகளுக்கு மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ARTIFICIAL INTELLIGENCE போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பணிகளை எளிதாக்க ARTIFICIAL INTELLIGENCE மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் காவல்துறையிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடங்கி உள்ளது. அவசரமில்லா தேவைகளுக்கு காவல்துறையின் உதவியை நாடும் மக்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவ உள்ளது. ஆப்பிளின் சிரி, அமேசானின் அலெக்சா ஆகிய தொழில்நுட்பத்துக்கு முகம் கொடுத்தது போல இந்த தொழில்நுட்பம் செயல்பட உள்ளது.

இதற்கு ELLA என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன், ஃபெதர்ஸ்டொன் மற்றும் ஜான்சன்வில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இந்த தொழில்நுடப்ம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அங்கு காவல்நிலையத்துக்கு வருபவர்களை வரவேற்பது, அவர்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்ப்பது உள்ளிட்ட பணிகளை ELLA செய்ய உள்ளது.

READ SOURCE
Open UCNews to Read More Articles